Home About Project Donate Contact

Analaitivu Nayinakulam Koozhaavadiyurai அனலைதீவு நயினாகுளம் கூழாவடியுறை

Thiruvarulamiku Pooranaidevi Pushkaladevi Udanuarai
Sri Harihara Puthra Iyanar Thirukovil
திருவருள்மிகு பூரணைதேவி புஷ்காலாதேவி உடனுறை ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனார் திருக்கோவில்

Official Website of New Temple Project அதிகாரபூர்வமான திருப்பணி இணையத்தளம்

A Temple Born of a Miracleஅற்புதத்தில் பிறந்த ஆலயம்

Guardian of Analaitivu for 450 Years450 ஆண்டுகளாக அனலைதீவின் காவல் தெய்வம்

About 450 years ago, the waves of the western sea delivered a mysterious wooden chest to the shores of Analaitivu. When the villagers opened it at a place called Nayina Kulam, beneath a sacred Koozhaa tree, they found Lord Iyanar enshrined with his divine consorts Pooranai and Pushkalai. A celestial voice commanded them to worship these deities every day — and from that miracle, this sacred temple was born.சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், மேற்குக் கடலின் அலைகள் அனலைதீவின் கரையில் ஒரு மர பேழையை கொண்டு வந்தன. நயினாகுளம் என்ற இடத்தில், புனிதமான கூழா மரத்தின் அடியில், அந்த பேழையை திறந்தபோது, பூரணை, புட்கலை சமேதராக ஐயனார் திருவுருவம் கொண்டு காட்சியளித்தார். வானில் ஒலித்த அசரீரி கட்டளையிட்டது — அந்த புனிதத் தலம் இன்று பிரம்மாண்டமான கோயிலாக உயர்ந்து நிற்கிறது.

The temple has been a living centre of miracles for its community — bringing rain in times of drought, healing livestock, and filling the island with the sound of midnight bells as the celestial beings are said to worship Lord Iyanar in the deep of night. Its magnificent 27-tiered chariot, crafted in 1980 by Indian artisans, is revered as one of the finest in all of Sri Lanka. The sacred Sangama Theertham beside the temple is believed to cure all ailments.இக்கோயில் தன் சமூகத்திற்கு வரம் வழங்கும் அற்புத தலமாக விளங்குகிறது — வறட்சி காலங்களில் மழை வருவித்து, கால்நடைகளை குணமாக்கி, நள்ளிரவில் மணியோசையுடன் தேவர்கள் வந்து வழிபாடு செய்வதாக பக்தர்கள் சாட்சியம் பகிர்கின்றனர். 1980-இல் கட்டப்பட்ட 27 அடுக்கு சித்திரத்தேர் ஈழத்தின் சிறந்த தேர்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. கோயிலின் அருகே உள்ள சங்கம தீர்த்தம் சகல நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.

Now, the community honours this 450-year legacy by building a new temple entirely in sacred black granite — following strict Agamic principles under master architect Perumal Sthapati of Mamallapuram. The Adikkal Naattu Vizha was held on 25 March 2024 under the Uttara Nakshatram. Granite blocks now arrive by sea to this island, as the new Moolavar Vimanam rises stone by stone toward the sky.இப்போது, இந்த 450 ஆண்டு பாரம்பரியத்தை போற்றும் வண்ணம், மாமல்லபுரம் பெருமாள் ஸ்தபதி வழிகாட்டுதலில் ஆகம சாஸ்திர விதிகளின்படி புதிய கோயில் கருங்கல்லில் கட்டப்படுகிறது. 25 மார்ச் 2024 அன்று உத்தர நட்சத்திரத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. கருங்கல் படகு மூலம் தீவை அடைந்து, புதிய மூலவர் விமானம் கல்லுக்கு கல்லாக வானை நோக்கி உயர்கிறது.

Construction Phasesகட்டுமான கட்டங்கள் Read Full Historyமுழு வரலாறு

Sacred Heritageபுனித வரலாறு

Temple Historyஆலய வரலாறு

Sri Harihara Puthra Iyanar Temple, Analaitivu

A Sacred Temple of 450 Years — Island of Analaitivu, Jaffna, Sri Lanka

Registered 3 December 1988 · Department of Hindu Religious & Cultural Affairs · Reg. No: HA/05/JA/15

The Island & Its Sacred Land

Situated to the southwest of the Jaffna Peninsula, surrounded by the azure sea, the beautiful island of Analaitivu is a land where Shaivism and Tamil culture flourish together. Its name originates from the natural rock formations that act as a barrier against the waves — "Anai-alai-theevu" (the island that stops the waves), later simplified to Analaitivu. During the Dutch colonial era, it was known as Rotterdam. Among the more than ten temples that adorn this island, the Sri Harihara Puthra Iyanar Temple — with a history of approximately 450 years — stands out as the guardian deity of the entire island community.

The Divine Origin — The Chest from the Sea

About 450 years ago, the waves of the western sea carried ashore a mysterious wooden chest. The villagers who discovered it joyfully began carrying it inland. However, upon reaching a place called Nayina Kulam, the chest became immovably heavy — no one could lift or move it. The people set it down beneath a Koozhaa tree (a local species) and were unable to move it further despite all their efforts.

When they opened the chest in wonder, they found inside the sacred idols of Lord Iyanar flanked by Pooranai and Pushkalai — his divine consorts. At that very moment, a divine voice (asareeri) descended from the heavens: "Worship these deities you have received, every day without fail." From that day onward, that sacred spot became the abode of Lord Iyanar, and it stands today as a magnificent temple.

Puranic Origins & Divine Lineage

Lord Iyanar (Ayyappan / Harihara Puthra) is born of the divine grace of both Hari (Vishnu) and Haran (Shiva):

  • Padma Puranam: When Lord Vishnu took the form of Mohini to destroy the demon Bhasmasura, Lord Iyanar was born from that divine union.
  • Kanda Puranam: When Shiva appeared as Bhikshadana and Vishnu as Mohini in the Dharukaavana forest to humble the arrogant sages, Harihara Puthra was born in that auspicious moment.
  • Indira's Protection: The Kanda Puranam also narrates how Iyanar sent his devoted warrior Maa Kaalar to protect Indraani (Indra's wife) from the demon Ajamughi, sister of Soorapadman.

Miracles & Divine Grace

  • Bringing Rain: During times of drought, devotees who pray to Iyanar find that rain falls even before they reach home — a miracle witnessed and spoken of by generations.
  • Healing Cattle: When livestock fall sick, tying a coin around the animal's neck as a vow (neerththi) in Iyanar's name heals the disease. He also cures village epidemics including smallpox and cholera through his divine grace.
  • Divine Midnight Worship: Even today, after the evening puja ends and the temple doors are closed, devoted believers hear temple bells ringing at midnight — as the celestial beings (devas) are said to come and worship Lord Iyanar in the deep of night.
  • Protection from Storms: Old Tamil verses narrate how, during a catastrophic storm when the sea rose in fury, the people prayed to Iyanar — and he appeared on his elephant vehicle, calmed the waves, and saved the island.

Temple Architecture & Sacred Features

  • Sacred Idols: Lord Iyanar is enshrined in the Moolasthanam with his consorts Pooranai and Pushkalai. Within the inner prakaram are shrines for Vinayagar, Murugan, Nandi, Chandeshwarar, and Vairavar.
  • The Sacred Chariot (Chittirattheer): In 1980, a magnificent 27-tiered temple chariot was crafted by Indian artisans with intricate sculptural detail. It is considered one of the finest temple chariots in all of Sri Lanka, on which Lord Iyanar rides in procession through the streets.
  • Sangama Theertham: The sea to the west of the temple is revered as the Sangama Theertham (akin to Sethu Theertham) — bathing in these sacred waters is believed to cure all ailments.
  • The Koozhaa Tree: The very Koozhaa tree under which the divine chest rested still stands within the temple grounds — healthy, sacred, and inseparable from the temple's identity.
  • Annathanam (Food Charity): Since 1972, the temple's Annathanam Madam (charity kitchen) has served thousands of devotees without interruption during all festival days and Guru Puja occasions.

Annual Festival

Every year during the month of Aadi, the grand ten-day Mahothsavam begins with the flag-hoisting ceremony on the Poorvapaksha Shashti day. The festival draws thousands of devotees from across Sri Lanka and from the diaspora worldwide. Those who surrender to Sri Harihara Puthra Iyanar of Analaitivu are freed from the sufferings of fate and blessed with grace both in this life and the next.

அனலையம்பதி அருள்மிகு ஹரிஹர புத்திர ஐயனார் திருத்தல வரலாறு

450 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட புனித தலம் — அனலைதீவு, யாழ்ப்பாணம், இலங்கை

பதிவு 3 டிசம்பர் 1988 · இந்து சமய & கலாசார அலுவல்கள் திணைக்களம் · பதிவு எண்: HA/05/JA/15

மண்ணின் மாண்பும் தீவின் சிறப்பும்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கு திசையில், 'சப்த தீவுகள்' என அழைக்கப்படும் தீவுக்கூட்டங்களில் ஒன்றாக அனலைதீவு திகழ்கிறது. கடல் அலைகளுக்கு அணையாகக் கற்பாறைகள் இயற்கையாகவே அமைந்திருப்பதால் இது 'அணை-அலை-தீவு' எனப்பட்டு, பின்னர் அனலைதீவு என மருவியது. ஒல்லாந்தர் காலத்தில் இதற்கு 'ரொற்றர்டாம்' என்ற பெயரும் வழங்கப்பட்டது. பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் இத்தீவை அலங்கரித்தாலும், சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயம் இத்தீவின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

தோற்றமும் பேழை வந்த வரலாறும்

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு, இத்தீவின் மேற்குக் கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்பட்ட ஒரு அற்புதப் பேழை (மரப்பெட்டி) கரை ஒதுங்கியது. அதனைக் கண்ட ஊர் மக்கள், பேரானந்தத்துடன் அதனைத் தூக்கிச் சென்றனர். ஆனால், நயினாகுளம் என்ற இடத்தை அடைந்ததும், அந்தப் பேழை எவராலும் அசைக்க முடியாதபடி பெரும் பாரமாக மாறியது. அங்கிருந்த ஒரு கூழா மரத்தின் அடியில் அதனை வைத்த மக்கள், மீண்டும் முயன்றும் அதனைத் தூக்க இயலவில்லை.

மக்களின் ஆவல் மேலிட அந்தப் பேழையைத் திறந்து பார்த்தபோது, அங்கே பூரணை, புட்கலை சமேதராக ஐயனார் திருவுருக் கொண்டு எழுந்தருளி இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது வானில் எழுந்த அசரீரி, "உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தெய்வங்களை நாள்தோறும் பூஜித்து வாருங்கள்" எனப் பணித்தது. அன்று முதல் அவ்விடமே ஐயனாரின் ஆஸ்தானமாகி, இன்று பிரம்மாண்டமான திருத்தலமாக உயர்ந்து நிற்கிறது.

புராணப் பின்னணியும் அவதார மகிமையும்

ஐயனார், ஹரி (திருமால்) மற்றும் ஹரன் (சிவன்) ஆகிய இருவரின் அருளாற்றலால் உதித்தவர்:

  • பத்மபுராணம்: பஸ்மாசுரனை அழிக்கத் திருமால் எடுத்த மோகினி அவதாரத்தின் போது ஐயனார் அவதரித்ததாகக் கூறுகிறது.
  • கந்தபுராணம்: தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கச் சிவன் பிச்சாடனராகவும், விஷ்ணு மோகினியாகவும் சென்ற வேளையில், காலநியதிப்படி ஹரிஹர புத்திரர் உதித்ததாக விவரிக்கிறது.
  • இந்திரன் காப்பு: சூரபத்மனின் தங்கை அஜமுகியிடமிருந்து இந்திராணியைக் காக்க, ஐயனார் தனது வீரருள் ஒருவரான மா காளரை அனுப்பி உதவி செய்த வரலாறு கந்தபுராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அற்புதங்களும் அருளாட்சியும்

  • மழை தரும் வள்ளல்: வறட்சி காலங்களில் ஐயனாரை வேண்டித் துதிப்பவர்களுக்கு, அவர்கள் இல்லம் சேர்வதற்கு முன்பே மழையினை வருவித்து ஐயன் அருள்புரிகிறார்.
  • பிணி தீர்க்கும் பெருமான்: கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால், ஐயப்பனை நினைத்து மாட்டின் கழுத்தில் காசு கட்டி நேர்த்தி வைப்பின் நோய் விலகுகிறது. அம்மை, பேதி போன்ற ஊர் நோய்களையும் அவர் குணமாக்குகிறார்.
  • அர்த்த ஜாமப் பூசை: இரவுப் பூசை முடிந்து கதவுகள் அடைக்கப்பட்ட பின், நள்ளிரவில் தேவர்கள் வந்து மணியடித்துப் பூசை செய்வதாக மெய்யன்பர்கள் சாட்சியம் பகிர்கின்றனர்.
  • ஊழித்தீயிலிருந்து காப்பு: ஊழிச்சண்ட மாருதம் வீசி கடல் பொங்கியபோது, மக்கள் ஐயனாரை வேண்டி நின்றனர். ஐயன் யானை வாகனத்தில் தோன்றி அலைகளை அடக்கி ஊரைக் காத்ததாகப் புலவர் பாடல்கள் கூறுகின்றன.

ஆலயத்தின் கட்டிடக்கலை மற்றும் சிறப்புகள்

  • திருவுருவங்கள்: மூலஸ்தானத்தில் ஐயனார் தேவியருடன் வீற்றிருக்க, உள்வீதியில் விநாயகர், முருகன், நந்தி, சண்டேஸ்வரர் மற்றும் வைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன.
  • சித்திரத்தேர்: 1980-இல் இந்தியக் கலைஞர்களைக் கொண்டு 27 அடுக்குகளைக் கொண்ட கலைநயம் மிக்க சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. இது ஈழத்தின் மிகச்சிறந்த தேர்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
  • சங்கம தீர்த்தம்: ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடல் சேது தீர்த்தத்திற்கு இணையான சங்கம தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இதில் நீராடுவோரின் தீரா நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
  • தல விருட்சம்: ஐயனார் முதன்முதலில் தங்கிய கூழா மரம் இன்றும் ஆலயத்தின் அடையாளமாகச் செழிப்புடன் காணப்படுகிறது.
  • அன்னதானச் சேவை: 1972-இல் அமைக்கப்பட்ட அன்னதான மடம் வாயிலாக, திருவிழா காலங்களிலும் குருபூசை தினங்களிலும் பக்தர்களுக்குத் தடையின்றி உணவளிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாக்களும் நிர்வாகமும்

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பூர்வபக்க சஷ்டி திதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் மஹோற்சவம் நடைபெறுகிறது. உலகெங்கும் உள்ள அடியவர்கள் போற்றும் வண்ணம் இவ்வாலயம் திகழ்கிறது. அனலையம்பதி ஹரிஹர புத்திர ஐயனாரை சரணடைவோர், விதியின் பயனால் வரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவர் என்பது திண்ணம்.

"சாமியே சரணம் ஐயப்பா"

Constructionகட்டுமானம்

Construction Phasesகட்டுமான கட்டங்கள்

Honouring 450 years of sacred history, the new granite temple rises in six phases — each stone blessed, each pillar placed by the hands of master craftsmen from Mamallapuram following ancient Agamic tradition.450 ஆண்டு புனித வரலாற்றை போற்றும் வண்ணம், புதிய கருங்கல் கோயில் ஐந்து கட்டங்களில் எழுகிறது — ஒவ்வொரு கல்லும் ஆசீர்வதிக்கப்பட்டு, ஆகம சாஸ்திர விதிகளின்படி மாமல்லபுரம் கலைஞர்களால் அமைக்கப்படுகிறது.

Phase 1
Completed · 2023–2024நிறைவு · 2023–2024

Foundation & Site Preparationஅஸ்திவாரம் & தள அமைப்பு

Adikkal Naattu Vizha (foundation stone ceremony), Bhoomi Pooja, site excavation, concrete foundation slab, and delivery of sacred black granite by sea to the island.அடிக்கல் நாட்டுவிழா, பூமி பூஜை, தள அகழ்வு, அஸ்திவார தகட்டு வார்ப்பு, மற்றும் கடல் மூலம் கருங்கல் வருகை.

Phase 2
In Progress · 2024–2026நடந்து வருகிறது · 2024–2026

Garbhagruham & Sanctumகர்ப்பக்கிரகம் & சன்னிதி

Construction of the inner sanctum (Garbhagruham), Artha mandapam, and the Moolavar Vimanam base in traditional black granite sourced from Northern Sri Lanka.கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மற்றும் மூலவர் விமானத்தின் அஸ்திவாரம் கட்டுதல்.

Phase 3
Upcoming · 2027வரவிருக்கிறது · 2027

Maha Mandapam & Towersமஹா மண்டபம் & விமானங்கள்

Maha mandapam, Front mandapam, Utchavar Vimanam, and the beginning of the Moolavar Vimanam tower (32′-0¼″ base) with ornate granite sculptures.மஹா மண்டபம், முன் மண்டபம், உத்சவர் விமானம் மற்றும் மூலவர் விமான கோபுரத்தின் தொடக்கம் (32′-0¼″ அடிப்படை) — அலங்கார கருங்கல் சிற்பங்களுடன்.

Phase 4
Upcoming · 2027வரவிருக்கிறது · 2027

Subsidiary Shrinesதுணை சன்னிதிகள்

Sri Vinayagar shrine, Sri Murugar shrine, Bhairavar shrine, Yagasali, Vahanam, Dwajasthambam, Balipeedam, and all ancillary temple structures.விநாயகர், முருகர், பைரவர் சன்னிதிகள், யாகசாலை, வாஹனம், துவஜஸ்தம்பம் கட்டுதல்.

Phase 5
Upcoming · 2027–2028வரவிருக்கிறது · 2027–2028

Kumbabishegamகும்பாபிஷேகம்

Final consecration ceremonies, installation of all deity idols, temple artwork, and the grand Kumbabishegam — the sacred crowning moment of the new temple's completion.இறுதி பிரதிஷ்டை விழாக்கள், தெய்வ விக்கிரக நிறுவுதல் மற்றும் கும்பாபிஷேக மஹா விழா.

Architectural Plansகட்டிட வரைபடங்கள்

Official Temple Drawingsஅதிகாரப்பூர்வ கோயில் வரைபடங்கள்

Seven detailed architectural drawings by Perumal Sthapati Art & Crafts Pvt Ltd, Mamallapuram. Scale: ⅓ inches to a foot. Date: 11 December 2023.மாமல்லபுரம் பெருமாள் ஸ்தபதியால் வரையப்பட்ட ஏழு விரிவான கட்டிட வரைபடங்கள். தேதி: 11 டிசம்பர் 2023.

1 / 7

Use ← → keys to navigate · + − to zoom ← → விசைகளால் செல்லவும் · + − பெரிதாக்கவும்

Project Timelineதிட்ட காலவரிசை

Journey of the Sacred Projectபுனித திட்டத்தின் பயணம்

September 2023

Special General Assembly Held to Pass Resolution Regarding Temple Constructionகோயில் கட்டுமான தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு பொதுக்கூட்டம்

A special general assembly passed key resolutions: to initiate renovation works; to build the main shrine and sub-shrines (including Pillaiyar and Murugan temples) in granite stone; to remove damaged sections and reconstruct. Global coordinators were appointed to raise funds. The assembly minutes were submitted to and acknowledged by the Divisional Secretary.சிறப்பு பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: புதுப்பிப்பு பணிகளை தொடங்குவது; பிள்ளையார் மற்றும் முருகன் கோயில்கள் உட்பட மூலஸ்தானம் மற்றும் துணை சன்னிதிகளை கருங்கல்லில் கட்டுவது; சேதமடைந்த பகுதிகளை அகற்றி மீண்டும் கட்டுவது. நிதி திரட்ட உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சபை நிமிடங்கள் பிரிவு செயலகத்திடம் சமர்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

December 2023

Architectural Design Commissionedகட்டிட வடிவமைப்பு ஆணை

Perumal Sthapati Art & Crafts Pvt Ltd engaged as architect. Seven detailed drawings prepared for the new temple — layout plan, elevations, cross-sections, and shrine details. Scale: ⅓ inches to a foot.பெருமாள் ஸ்தபதி கலை மற்றும் கைவினை நிறுவனம் கட்டிட வடிவமைப்பாளராக நியமிக்கப்பட்டது. புதிய கோயிலுக்கான ஏழு விரிவான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன — திட்ட வரைபடம், உயர வரைபடங்கள், குறுக்குவெட்டுகள் மற்றும் சன்னிதி விவரங்கள். அளவு: ஒரு அடிக்கு ⅓ அங்குலம்.

February 2024

Public Consultation — Canada Online Meetingபொது ஆலோசனை கூட்டம் — கனடா

A public consultation was held online from Canada, uniting Nainativu devotees worldwide to confirm the renovation budget. Architectural drawings were obtained; cost quotations sought. A full documentation package was compiled — land survey map, current & proposed temple layouts, cost quotations, contractor details, assembly minutes, financial commitments, and financial arrangement documents.அனலைதீவு பக்தர்களை உலகளாவிய அளவில் ஒன்றிணைக்க கனடாவிலிருந்து ஆன்லைன் மூலம் பொது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்டிட வரைபடங்கள் பெறப்பட்டன; செலவு மதிப்பீடுகள் பெறப்பட்டன. நில அளவை வரைபடம், தற்போதைய & முன்மொழியப்பட்ட கோயில் திட்டங்கள், ஒப்பந்தகார விவரங்கள், நிதி ஏற்பாட்டு ஆவணங்கள் உட்பட முழுமையான ஆவண தொகுப்பு தயாரிக்கப்பட்டது.

February 2024

Documents Submitted to Divisional Secretaryபிரிவு செயலகத்திற்கு ஆவணங்கள் சமர்பிப்பு

All renovation documents were submitted to the Divisional Secretary through the Cultural Officer. The Divisional Secretary was directed to forward these to the Government Agent, which was done the following day.அனைத்து புதுப்பிப்பு ஆவணங்களும் கலாசார அலுவலர் மூலம் பிரிவு செயலகத்திடம் சமர்பிக்கப்பட்டன. அடுத்த நாள் இவை அரசாங்க அதிபரிடம் அனுப்பப்பட்டன.

March 2024

Thirupani Sabai Formally Constitutedதிருப்பணிச்சபை அதிகாரப்பூர்வமாக அமைப்பு

A special general assembly was held and the renovation sub-committee (Thirupani Sabai) was formally constituted per temple by-laws. All documents were presented and explained. The Divisional Secretary and senior District Secretariat officials attended the meeting.சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று திருப்பணிச்சபை கோயில் நடைமுறை விதிகளின்படி அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. பிரிவு செயலகர் மற்றும் மாவட்ட செயலக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

March 2024

Adikkal Naattu Vizha — Foundation Stone Ceremonyஅடிக்கல் நாட்டுவிழா

The auspicious Shangu Sthapana ceremony was held at 9:18 AM under Uttara Nakshatram. The temple community gathered in large numbers to witness the historic beginning of the new temple's construction.சுப முகூர்த்த வேளையில் சங்கு ஸ்தாபன விழா காலை 9:18 மணிக்கு உத்தர நட்சத்திரத்தில் நடைபெற்றது. ஐயனாரின் அடியார்கள் ஆயிரக்கணக்கில் கூடி வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

April 2024

Construction Contract Signedகட்டுமான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது

The construction contract was signed at the temple hall in the presence of Divisional Secretariat representatives — Cultural Officer, Hindu Religious & Cultural Development Officer, and Village Officers. The management committee (chairman, secretary, treasurer) and the building contractor signed the agreement. All documents were reviewed and witnessed by the Divisional Secretariat officials.கட்டுமான ஒப்பந்தம் கோயில் மண்டபத்தில் பிரிவு செயலக பிரதிநிதிகள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது. ஆலய நிர்வாக குழு மற்றும் கட்டிட ஒப்பந்தகாரர் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அனைத்து ஆவணங்களும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு சாட்சியமளிக்கப்பட்டன.

May 2024

Granite Procurement & Site Excavationகருங்கல் கொள்முதல் & தள அகழ்வு

Sacred black granite procured from Northern Sri Lanka and transported by flatbed truck. Stone blessing ceremony performed at the stone yard. JCB excavation of foundation trenches commenced on May 29–31 with precise measurements.புனித கருங்கல் வடக்கு இலங்கையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு தட்டணி லாரியில் கொண்டு வரப்பட்டது. கல் திடலில் ஆசீர்வாத விழா நடத்தப்பட்டது. மே 29–31 தேதிகளில் JCB இயந்திரம் மூலம் அஸ்திவார அகழ்வு துவங்கியது.

June 2024

Sacred Granite Arrivesகருங்கல் வருகை

The historic work of unloading the sacred black granite — destined to become the divine form of our guardian deity Analaiyampathi Sri Harihara Puthra Iyanar — began today. A momentous milestone in the temple's renovation journey.எமது குல தெய்வம் அனலையம்பதி ஶ்ரீ ஹரிஹரபுத்ர ஐயனாரின் திருப்பணி வேலைகளுக்காக "தெய்வீக உரு தேடியுறையும் கருங்கல்" இறக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

January 2025 Onwards

Sanctum Construction & Vimanam Risingகர்ப்பக்கிரகம் & விமானம் கட்டுதல்

Active construction of the Garbhagruham, Artha mandapam and Moolavar Vimanam continues. Community support from the diaspora remains vital to sustaining the pace of construction.கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் மற்றும் விமானம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Get in Touchதொடர்பு

Have Questions?கேள்விகள் உள்ளதா?

📍
Locationஇடம்
Ward No. 5, Nayinakulam, Analaitivu, Jaffna, Sri Lankaவார்டு எண். 5, நயினாகுளம், அனலைதீவு, யாழ்ப்பாணம், இலங்கை
📞
Phoneதொலைபேசி
+94 77 945 4141+94 77 945 4141
✉️
Emailமின்னஞ்சல்
🕐
Darshan Hoursதரிசன நேரம்
Morning 6:00 AM – 12:00 PM · Evening 4:00 PM – 8:00 PMகாலை 6:00 – 12:00 · மாலை 4:00 – 8:00