This page explains a temporary arrangement for the temple’s finances, made under a court order, and what it means when you give to the temple. நீதிமன்றக் கட்டளையின் கீழ் ஆலயத்தின் நிதி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக ஒழுங்கையும், ஆலயத்திற்கு நீங்கள் வழங்கும்போது அதன் பொருளையும் இப்பக்கம் விளக்குகிறது.

An interim arrangement under court orderநீதிமன்றக் கட்டளையின் கீழ் இடைக்கால ஒழுங்கு

Under an order of the court at Kayts (Ūrkāvaṟṟuṟai) in case TR 38/24, Mr C. Thulasitharan has been appointed as the temple’s temporary Receiver. From 14 September 2026, the Receiver oversees the temple’s finances and property on behalf of the court, for as long as the order remains in force. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இலக்கம் TR 38/24 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு இணங்க, திரு சி. துளசிதரன் அவர்கள் ஆலயத்தின் தற்காலிகப் பெறுநராக (Receiver) நியமிக்கப்பட்டுள்ளார். 14 செப்டெம்பர் 2026 முதல், நீதிமன்றக் கட்டளை நடைமுறையில் இருக்கும் காலம் வரை, ஆலயத்தின் நிதியையும் சொத்துக்களையும் நீதிமன்றத்தின் சார்பில் பெறுநர் மேற்பார்வை செய்வார்.

What devotees need to knowஅடியார்கள் கவனத்திற்கு

  1. Donations and paymentsநன்கொடைகளும் கொடுப்பனவுகளும்

    All donations and payments to the temple — including thiruppani donations, pooja and archanai fees and upayam contributions — are to be made to the Receiver’s court-approved bank account, or by cheque payable to the Receiver.திருப்பணி நன்கொடைகள், பூசை மற்றும் அர்ச்சனைக் கட்டணங்கள், உபய நிதி உட்பட ஆலயத்திற்கான அனைத்து நன்கொடைகளும் கொடுப்பனவுகளும், நீதிமன்ற அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள பெறுநரின் வங்கிக் கணக்கிலோ அல்லது பெறுநரின் பெயருக்குக் காசோலையாகவோ செலுத்தப்பட வேண்டும்.

    The bank details will be published here shortly. To give or pay in the meantime, please contact the temple office: +94 77 945 4141 · info@analaitivuiyanar.org.வங்கி விபரங்கள் விரைவில் இங்கு வெளியிடப்படும். அதுவரை நன்கொடை அல்லது கொடுப்பனவு செய்ய ஆலய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்: +94 77 945 4141 · info@analaitivuiyanar.org.

  2. Always ask for an official receiptஉத்தியோகபூர்வ பற்றுச்சீட்டைக் கேட்டுப் பெறுங்கள்

    Every payment made at the temple receives an official receipt approved by the Receiver. Please do not hand cash to anyone without receiving one.ஆலயத்தில் செலுத்தப்படும் ஒவ்வொரு கொடுப்பனவுக்கும் பெறுநரால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டு வழங்கப்படும். பற்றுச்சீட்டு இன்றி எவரிடமும் ரொக்கமாகப் பணம் வழங்க வேண்டாம்.

  3. Offering boxesகாணிக்கைப் பெட்டிகள்

    The temple’s offering boxes (undiyal) are sealed under the Receiver’s supervision. They are opened at set intervals in the presence of witnesses, counted, deposited in the bank and reported to the court.ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகள் (உண்டியல்) பெறுநரின் மேற்பார்வையின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், சாட்சிகள் முன்னிலையில் அவை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டு, வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்படும்.

  4. Tenants of temple propertyஆலயச் சொத்துக்களின் குத்தகைதாரர்கள்

    Those who rent or lease the temple’s shops, halls, land or houses should pay their rent to the Receiver and obtain a receipt.ஆலயத்திற்குச் சொந்தமான கடைகள், மண்டபங்கள், காணிகள் அல்லது வீடுகளைக் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு எடுத்துள்ளவர்கள், தமது வாடகையைப் பெறுநரிடம் செலுத்திப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  5. Suggestions and concernsஆலோசனைகளும் முறைப்பாடுகளும்

    Suggestions or concerns about the temple’s administration may be sent to the Receiver in writing, with any supporting information, in person or using the contact details below. They are handled in confidence.ஆலய நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகளை, ஆதாரங்களுடன் எழுத்துமூலம் பெறுநரிடம் நேரடியாகவோ கீழே உள்ள தொடர்பு விபரங்கள் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விபரங்கள் இரகசியமாகப் பேணப்படும்.

Contacting the Receiverபெறுநரைத் தொடர்புகொள்ள

Mr C. Thulasitharan, Receiverதிரு சி. துளசிதரன், பெறுநர் (Receiver)

Sri Harihara Puthra Iyanar Temple, 5th Ward, Analaitivuஅருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலயம், 5 ஆம் வட்டாரம், அனலைதீவு

The Receiver’s telephone and email will be added here. Until then, written suggestions or concerns may be handed in at the temple office.பெறுநரின் தொலைபேசி இலக்கமும் மின்னஞ்சல் முகவரியும் விரைவில் இங்கு சேர்க்கப்படும். அதுவரை, எழுத்துமூல ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகளை ஆலய அலுவலகத்தில் கையளிக்கலாம்.

The Receiver’s noticeபெறுநரின் அறிவித்தல்

This page summarises the Receiver’s public notice in plain language. The Receiver’s signed notice, in Tamil, is the authoritative text; a copy will be published here. பெறுநரின் பொது அறிவித்தலின் சுருக்கமே இப்பக்கம். பெறுநர் கையொப்பமிட்ட தமிழ் அறிவித்தலே அதிகாரபூர்வமான பதிப்பாகும்; அதன் பிரதி இங்கு வெளியிடப்படும்.

For questions about the temple, its worship or the thiruppani, you are welcome to contact the temple office as before. ஆலயம், வழிபாடுகள் அல்லது திருப்பணி தொடர்பான கேள்விகளுக்கு, முன்பு போலவே ஆலய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.